Engineering படிப்புகளில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 10 முதல் விண்ணப்பிக்கலாம் - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் - செய்தி வெளியீடு எண்: 567; நாள்:05.08.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 05, 2021

Comments:0

Engineering படிப்புகளில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 10 முதல் விண்ணப்பிக்கலாம் - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் - செய்தி வெளியீடு எண்: 567; நாள்:05.08.2021

Engineering படிப்புகளில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு வரும் 10 முதல் 30-ம் தேதி வரை tnlea.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

செய்தி வெளியீடு எண்: 567
நாள்:05.08.2021 செய்தி வெளியீடு
தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப் படிப்பிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் / அண்ணாமலை பல்கலைக்கழகம் / அண்ணா பல்கலைக்கழக (உறுப்புக் கல்லூரிகள்) - களில் மற்றும் சுயநிதி பொறியில் கல்லூரிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதள மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இணையதள மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள் :
விண்ணப்பிக்கும் முறை: www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதள மூலமாக துவங்கும் நாள் : 10.08.2021 முடிவுறும் நாள் : 30.08.2021
விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் :

3) பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net | Banking இணையதன வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary, Second Year B.E. / B.Tech. Degree Admissions - 2021-22, ACGCET, Karaikudi" payable at Karaikudi, என்ற பெயரில் 10.08.2021 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம். 4) SC / SC(A) / ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. 5) விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவுசெய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் Second Year B.E. / B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
மேலும் விவரங்கள் இணையதள முகவரியில் அறிய www.tnlea.com / www.accet.co.in | www.accetedu.in
"INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES" பக்கத்தில் பார்க்கவும்.
தொடர்பு எண் : 04565-230801, 04565-224528

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews