CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேம்பாட்டுத் தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் எனவும் இதற்கான முடிவுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என கல்வி வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டதான CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான மேம்பாட்டுத் தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று CBSE கல்வி வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் (ICSE) வாரியம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மேம்பாட்டுத் தேர்வுகளை நடத்துவதாகவும், செப்டம்பர் 20 ஆம் தேதி தேர்வு முடிவுகளை அறிவிப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது. முன்னதாக தேர்வு அட்டவணை தொடர்பாக பிரமாண பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் CBSE மற்றும் ICSE சமர்ப்பித்த அட்டவணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் அங்கீகரித்துள்ளார். இவற்றில் CBSE தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சில தெளிவின்மை இருந்ததால், 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மேம்பாட்டு தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணையை நீதிமன்ற அவை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் கீழ் ஆகஸ்ட் 10 அன்று, தேர்வு பதிவுகளுக்காக CBSE போர்டல் திறக்கப்படும் எனவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின் தேர்வுகளுக்கான நாட்கள் அறிவிக்கப்படும் என வாரியம் குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்ந்து ICSE விண்ணப்பதாரர்களுக்கான பதிவு ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விரிவான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட உள்ளது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் பட்சத்தில் முடிவுகள் செப்டம்பர் 20 ல் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.