பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் உள்ளவாறு மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் .43 அறிவிப்பின்படி , கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளை புதுமைச் செயல்பாடுகளுடன் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில எழுத்தறிவு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இணைப்பில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி கற்போம் எழுதுவோம் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய ஏதேனும் 2 மையங்களை ( ஒரு ஒன்றியத்திற்கு ) தெரிவு செய்து இணைப்பில் உள்ள படிவத்தின்படி கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒன்றியங்களிலிருந்து பெறப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில இயக்ககத்திற்கு அனுப்பப்படும்.
மாநில இயக்ககத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் இம்மையங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 3 மையங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு மாநில எழுத்தறிவு விருது 2020-21 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கற்போர் மையங்களுக்கான எழுத்தறிவு விருது வழங்குதல் என்பது வயது வந்தோர் கல்வித் திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்துகின்ற மையங்களை ( பள்ளிகளை ) தெரிவு செய்து ஊக்கப்படுத்தும் ஒரு செயல்பாடாகும் . எனவே முன்குறிப்பிட்டுள்ள சிறந்த கற்போர் மையங்களுக்கான மாநில எழுத்தறிவு விருது வழங்குதல் சார்ந்த செயல்பாடுகளில் முறையான வெளிப்படைத் தன்மையை கையாண்டு , எந்தவித தொய்விற்கும் , சிக்கல்களுக்கும் இடமளிக்காத வளமைய வகையில் தனிக்கவனம் செலுத்தி சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டார மேற்பார்வையாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2 சிறந்த மையங்களின் கருத்துருக்களை உரிய படிவத்தில் வருகின்ற 01.09.2021 க்குள் மாவட்டத்திட்ட வளமைய அலுவலகத்திற்கு வட்டார அனுப்பி வைக்குமாறு மேற்பார்வையாளர்களுக்கு தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
PLA Award Proposal Format - Download here.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.