தென்னை சாகுபடியில் பட்டயப்படிப்பு- ஆழியாறு ஆராய்ச்சி நிலையம் அழைப்பு
பொள்ளாச்சி, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், முதுநிலை பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு, பட்டதாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.கோவை வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், பொள்ளாச்சி, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை விவசாயிகள், பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்னையில் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த முதுநிலை பட்டயப்படிப்பு, இரண்டு பருவங்களை கொண்ட ஓராண்டு படிப்பாகும். ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம். ஒரு பருவத்துக்கு, 12 வகுப்புகள் நடத்தப்படும். இந்த பட்டயப்படிப்பு வாயிலாக, தென்னையில் சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி தாக்குதல்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, ஏற்றுமதி என பல்வேறு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
பட்டயப்படிப்பு முடித்தோர், தென்னை சார்ந்த தொழில் துவங்க வங்கிகளில், 10 முதல் 15 சதவீத மானியத்தில் கடன்கள் பெறலாம். அதேபோல், சான்றிதழ் பட்டயப்படிப்பில் விவசாயிகளுக்கு, தென்னை பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்பட பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்படும். ஆறு மாத கால சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். மேலும், விபரங்களுக்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.