ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி அறிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட் டுறவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்து பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட் டுறவு சங்கங்களின விதிகளை பின்பற்றியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற் கொள்ளப்படும்.தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களை அனைத்து மாவட்டங்களி லும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள் முதல் நிலையங்களை அமைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 19 மாவட்டங்களில், 68 நேரடி கொள்முதல் நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் கலைக்கல்லூரி
கூட்டுறவு துறையின் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் தொழிற் பயிற்சி கல்லூ ரிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இவற்றில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா மன் னவனூர் கிராமத்தில், தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் 20 ஏக்கர் நிலத்தில் 26 ஆயிரம் ச.மீ. பரப்பில் 385 கோடி உத் தேச திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 720 கோடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.