விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை தொடர்பாக, உயர் கல்வித் துறை உறுதியான முடிவு எடுக்காததால், மூன்று மாவட்ட கல்லுாரி மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலை உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கு தற்காலிகமாக, விழுப்புரத்தில் உள்ள பழைய அரசு சட்ட கல்லுாரி கட்டடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டது; துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார்.விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட கல்லுாரிகள், ஜெயலலிதா பல்கலை இணைப்பில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உத்தரவு ரத்து
இந்நிலையில், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதா பல்கலையை மூட முயற்சி எடுக்கப்பட்டது. விழுப்புரம், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்லுாரிகள், வேலுாரில் உள்ள திருவள்ளுவர் பல்கலையுடன் மீண்டும் இணைந்து செயல்பட அரசு உத்தரவிட்டது.இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கில், திருவள்ளுவர் பல்கலையின் இணைப்பை பெறுவதற்கான மறு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தனி பல்கலையாக செயல்படும் அண்ணாமலை பல்கலை, இனி இணைப்பு அந்தஸ்துக்கான பல்கலையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. எங்கே உள்ளது?
இந்நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்கும் அந்தஸ்துடன் அண்ணாமலை பல்கலை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விழுப்புரம் ஜெயலலிதா பல்கலையின் அரசாணை இன்னும் அமலில் உள்ளது.எனவே, ஜெயலலிதா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள், அண்ணாமலை பல்கலையின் இணைப்பில் உள்ளதாக பட்ஜெட்டில் கூறியுள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக உயர்கல்வித் துறையின் இந்த குழப்பமான நிலையால், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கல்லுாரி நிர்வாகிகளும், அதன் மாணவர்களும், தங்கள் கல்லுாரிகள் அண்ணாமலை பல்கலையில் உள்ளதா, திருவள்ளுவர் பல்கலையா அல்லது ஜெயலலிதா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ளதா என, பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.