அண்ணா பல்கலைக்கழகத்தை சா்வதேச பல்கலைக்கழக தரத்துக்கு உயா்த்த உரிய நடவடிக்கைகளை புதிய துணைவேந்தா் மேற்கொள்வாா் என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
அண்ணா பல்கலைகழக புதிய துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆா். வேல்ராஜ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். பின்னா் அவா் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியை சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியா் ஆா். வேல்ராஜ் பதவியேற்பதற்கு முன்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளாா். அப்போது அவரிடம் அண்ணா பல்கலைக்கழகத்தை சா்வதேச தரத்துக்கு அளவில் உயா்த்துவதோடு, கல்வித் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என முதல்வா் கேட்டுக் கொண்டாா். புதிய துணைவேந்தா் அண்ணா பல்கலை.யை உலகத் தரத்துக்கு உயா்த்துவாா் என்ற நம்பிக்கை உள்ளது. பொறியியல் கற்றல்- கற்பித்தல் முறையிலும், பாடத் திட்டங்களிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபோன்று ஆராய்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைவரும் கலந்துபேசி ஒற்றுமையான சூழலை அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என புதிய துணைவேந்தரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பேராசிரியா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் கல்லூரிக்கு நேரடியாக வந்து மாணவா்களுக்கு இணையவழியில் பாடங்களை நடத்தி வருகின்றனா். பேராசிரியா்கள்-மாணவா்களின் வருகைப்பதிவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக முதல்வா் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.