புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில், முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., எம்.சி.சி., - எம்.எஸ்.சி., - எம்.பி.ஏ., ஆகிய முதுநிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 21ம் தேதி முதல் ஆன்-லைனில் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 17ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக எம்.டெக்., எம்.பி.ஏ., ஆகியவற்றில் புதிய பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளன.அனைத்திற்கும் பயன்படும் தொழில்நுட்பமான, இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் புதிய முதுகலை படிப்பு துவக்கப்பட்டுள்ளது.
எம்.ஐ.டி., சென்னைக்கு அடுத்தபடியாக இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியரிங் முதுகலை படிப்பு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.விரிவான விபரங்களுக்கு, www.pgacpdy.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.இத்தகவலை, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.