புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கென முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் - ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கென முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் - ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!

நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தில் 38-வது | மாவட்டமாக மயிலாடுதுறை புதிய மாவட்டம் | கடந்த ஆண்டும் மார்ச் மாதம் அப்போதைய அ.தி.மு.க அரசால் உருவாக்கப்பட்டது. அதள்பின்னர் 2020 ஜூன் மாதத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு தனி அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக இருந்த இரா.லலிதா பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

மாவட்ட ஆட்சியரகம் |காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை மயிலாடுதுறை மாவட்டத்தில் |புதிதாக கட்டிடங்கள் கட்டப் படவுள்ள நிலையில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது, தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற [நிலையில் புதிதாக உருவாக்கப் பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மற்ற |அரசுத் துறைகள் அலுவலகங்கள் தனியாக அமைக்கப்பட்டு செயல்பாடுகள் விரைவுப் படுத்தப் பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, | வேளாண்துறை என அனைத்து துறைகளும் |நாகப்பட்டினத்திலிருந்து கோப்புகள் பிரிக்கப்பட்டு அதற்கான தனி, தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. ஆனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் மட்டும் புதிதாக நியமிக்கப் படாமல் நாகப்பட்டினம் மாவட்டத்திலேயே இதுவரை செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் |60 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 30 உதவிப்பெறும் மேல் நிலைப்பள்ளிகள், 70 | அரசு உயர்நிலைப்பள்ளிகள், 35 உதவிபெறும் உயர் நிலைப்பள்ளிகள், 50-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள், 100-க்கும் மேற்பட்ட | பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. fia = sqrt(8) , கொள்ளிடம், செம்பனார் கோயில், மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட ஒன்றியங்களில் வட்டார கல்வி அலுவலகங்களும், மயிலாடுதுறை, சீர்காழி | என இரு கல்வி மாவட்ட அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. 3500-க்கும் மேற்பட்ட ஆசிரிகள். அலுவலர்கள் இந்த இரு கல்வி மாவட்டத்தில் |பணிபுரிந்துவருகின்றனர். இவ்வாறு | பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், கல்வி (அலுவலர்களும் எந்தவித கோரிக்கைகள். பயிற்சிகள். கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் நாகப்பட்டினம் செல்லும் நிலையே இதுவரை தொடர்கிறது. அதேபோல் மாணவமாணவிகளும் தங்கள் தேர்வவு மற்றும் கல்வி உதவித் தொகை, சான்றிதழ்கள் போன்றவற்றை பெற முன்பு | மாவட்ட தலைநகராக இருந்த நாகப்பட்டினம் சென்றுதான் வருகின்றனர். இதனால் காலநேரம், பணவிரயம் ஏற்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட கடைகோடியான கொள்ளிடம் பகுதியிலிருந்து நாகப்பட்டினம் ஏதேனும் அரசு அலுவலர் சம்பந்தமாக பொதுமக்கள், அதிகாரிகள், மாணவர்கள் சென்றுவர வேண்டும் என்றால் 1 முழுநாள் ஆகிவிடுகிறது. மேலும் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நாகப் பட்டினம் செல்ல புதுச்சேரி மாநிலத்தை கடந்துதான் சென்றுவர வேண்டும். இந்த நிலையை மாற்றவேண்டும் என்ற கால் நூற்றாண்டு கோரிக்கைதான். தற்போது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப் பட்டு தீர்வுகானாப்பட்டது. ஆனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மட்டும் இதுவரை தனியாக நியமிக்கப் படாமல் இருப்பதால் புதிய மாவட்டம் உருவானதை கல்வியாளர்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் அதன் பலனை அடைய முடியவில்லை. அண்மையில் கூட தமிழகம் முழுவதும் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலராக இருந்த புகழேந்தி பணி யிடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு புதிதாக முதன்மை கல்வி அலுவலராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கென புதிதாக முதன் கல்வி அலுவலர் நியமிக்கப் படவில்லை. ஆகையால் தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி புதிதாக உருவாக்கப் பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலரை முழுமையான அலுவலகம் மற்றும் பணியிடங்களுடன் நியமித்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மயிலாடு துறை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஈழகம் மாநில துணைதலைவர் நா.அசோக்குமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட அமைப்புசெயலர் கோவி.நடராஜன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மாவட்ட தலைவர் மதியழகன், மாவட்ட ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காசி. இளங்கோவன் ஆகியோர் கூறுகையில், புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடு துறை மாவட்டத்திற்கு புதிய முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும்.புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பயன் கல்வியாளர்களுக்கு கிடைக்காமல் இதுவரை அலைகழிக்கப்படும் சூழலே நிலவுகிறது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews