தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட, உயர் கல்வி துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.
ஜெயலலிதா பெயரில் மொத்தம் மூன்று பல்கலைகள் உள்ளன. ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலை இல்லை என, முதல்வர் ஸ்டாலினிடம் தி.மு.க., அனுதாபிகள் தெரிவித்துள்ளனர்.எனவே, தற்போதுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டலாம் என ஆலோசனை நடந்து வருகிறது. முதற்கட்ட ஆலோசனையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அக்ரி மாதவன் தலைமையில், முதல்வருக்கும், பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி செயலருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவை வேளாண் பல்கலை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பல்கலை அந்தஸ்து பெற்றதால், அதற்கு கருணாநிதியின் பெயர் வைக்க ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, கோவை வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர் சூட்டும் அறிவிப்பு விரைவில் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.