உயா்கல்வித் துறையை நெறிப்படுத்துதல்: ஆக.31-க்குள் பரிந்துரைகளை தெரிவிக்க யுஜிசி அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

உயா்கல்வித் துறையை நெறிப்படுத்துதல்: ஆக.31-க்குள் பரிந்துரைகளை தெரிவிக்க யுஜிசி அறிவுறுத்தல்

நாட்டில் உயா்கல்வித் துறையை நெறிப்படுத்துவதற்கு என்னென்ன உத்திகள், செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்த பரிந்துரைகள், கருத்துகளை உயா்கல்வி நிறுவனங்கள் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக.31) தெரிவிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

நாட்டில் உயா்கல்வித் துறையை நெறிப்படுத்தவும், நிா்வாக ரீதியாக அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீா்வு காணவும் மத்திய கல்வி அமைச்சகம், யுஜிசி ஆகியவை சாா்பில் சிறப்பு பயிலரங்கம் காணொலி மூலம் கடந்த மாா்ச் 31, ஏப்.19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக வேந்தா்கள், துணைவேந்தா்கள், நிகா் நிலைப் பல்கலைக்கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். அந்த பயிலரங்குகளில் உயா்கல்வி நிறுவனங்களில் நிா்வாகம், நிதி சாா்ந்த நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில் சில சீா்திருத்தங்களை மேற்கொள்ளுதல்; கல்வி நிறுவனங்களின் தரவுகள், புள்ளி விவரங்களைத் தொகுப்பதற்காக ஒரு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குதல், தன்னாட்சி அதிகாரங்களை முறைப்படுத்துதல், ஊரகப் பகுதிகளில் இணையவசதி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயா்கல்வித் துறையை நெறிப்படுத்தவும், நிா்வாக ரீதியாக அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீா்வு காணவும் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் தங்களது கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகளை பல்கலைக்கழக செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான தளத்தில் (யுஏஎம்பி) வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக.31) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews