மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 5 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கும், நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கும் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் பரவல் குறைந்து வருவதையடுத்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவை அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்திருந்தார். அந்த வகையில் மஹாராஷ்டிராவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பள்ளிகள் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளில் நேரடி வகுப்புகள் 5 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு தொடங்கும். நகர்ப்புறங்களை பொருத்தளவு முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூலை 12 ஆம் தேதி முதல் மஹாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் இருக்கும் சுமார் 5947 பள்ளிகளில், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை அரசு மீண்டும் துவங்கியது. சமீபத்தில் பஞ்சாப், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டன.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 16 அன்று நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் ஆகஸ்ட் 23 முதல் 9-12 வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. தமிழகத்திலும் செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.