01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.

01.08.2021 நிலவரப்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08 . அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் ( BT Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில் இக்கல்வியாண்டிற்கான ( 2021-22 ) அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( BT Staff Fixation ) சார்பான பணிகள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS ) மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கிறது.

எனவே , இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் EMIS இணையதளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த கீழ்க்குறிப்பிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1 ) மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப் பள்ளிகள் / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் ( Class wise ) மற்றும் தமிழ் வழி / ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக. 2 ) ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட ( Sanctioned Post details ) அனைத்துவகை ஆசிரியர்கள் பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும் . அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.

3 ) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்கள் சார்பான முழு விவரங்களையும் ( Teacher Profile ) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews