தமிழ் வழி இடஒதுக்கீடு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி., மனு தள்ளுபடி
வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும், தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவை முன்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்யக் கோரிய டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.'குரூப் 1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழியில் படித்ததற்குரிய - பி.எஸ்.டி.எம்., - சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். 'தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக்கல்வி, கல்லுாரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மார்ச்சில் நீதிபதிகள்என்.கிருபாகரன், பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், 'வேலைவாய்ப்பிற்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு 20 சதவீதம்முன்னுரிமை அளிக்கும்சட்டத் திருத்தம் செல்லுபடியாகும்.
'இதை டி.என்.பி.எஸ்.சி., 2020 தேர்வு அறிவிப்பு நடைமுறையிலிருந்து பின்பற்ற வேண்டும்' என்றனர். டி.என்.பி.எஸ்.சி., தாக்கல் செய்த மனு:சட்டத் திருத்தத்திற்கு முன், தேர்வு அறிவிப்பு வெளியானது.தேர்வு நடத்தி விட்டோம். தமிழ்வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவைநிறைவேற்றுவது மற்றும் அனைவரின் கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறைச் சிரமங்கள் உள்ளன.காலதாமதம் ஏற்படும். சட்டத்திருத்தத்தின்படி முன்தேதியிட்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். சட்டத் திருத்தத்தின்படி எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டது. நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள், 'தமிழ் வழியில் படித்ததற்கான சலுகை பெற, மதுரை காமராஜ் பல்கலை, அண்ணாமலை பல்கலை உட்பட சில பல்கலைகளில் முறைகேடாக சான்று பெறுகின்றனர்' என அதிருப்தி வெளியிட்டு, டி.என்.பி.எஸ்.சி.,யின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.