நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்விற்கு தற்போது வரை விண்ணப்ப பதிவு தொடங்கப்படாத காரணத்தால் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
நீட் தேர்வு ஒத்திவைப்பு:
தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் மே மாத இறுதியில் இந்த தேர்வு நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு 60 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்ப பதிவு தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்விற்கு இன்னும் விண்ணப்ப பதிவு தொடங்கப்படவில்லை. இதனால் நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களிடம் மாறுபட்ட கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது. மேலும் கொரோனா பரவல் தற்போது குறைந்து வந்தாலும் இன்னும் அச்சம் நீங்கவில்லை. எனவே இந்த தேர்வை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட வேண்டும் என பல மாணவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதே சமயத்தில் மருத்துவ கல்லூரிகளில் உரிய நேரத்தில் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டியதும் அவசியமாகும். இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.