சென்னை மாநகராட்சி வழங்கும் தொழிற்பயிற்சி படிப்புகள் – ஆணையர் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

சென்னை மாநகராட்சி வழங்கும் தொழிற்பயிற்சி படிப்புகள் – ஆணையர் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அவர்கள், சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


தொழிற்படிப்புகள்:


தமிழகம் முழுவதும் அரசு நடத்தும் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி படிப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மற்ற இடங்களில் சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களும் அரசின் விதிமுறையின் படி சேர்க்கப்படுவார்கள். இங்கு கணினி இயக்குபவர், குழாய் பொருத்துனர், மோட்டார் வாகன மெக்கானிக், மின்பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த படிப்புகளுக்கு மொத்தம் 184 இடங்கள் உள்ளது. மேலும், அனைத்து பிரிவுகளுக்கும் 10ம் வகுப்பு கல்வித்தகுதி இருக்க வேண்டும். 14 வயது முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி முடித்த பிறகு மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ் மற்றும் பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது. மாநகராட்சி இணையதள முகவரி www.chennaicorporation.gov.in அல்லது தொழிற்பயிற்சி நிலைய இணையதள முகவரி gccapp.chennaicorporation.gov.in/cciti/ ல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ராயப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews