CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீடுகள் – பள்ளிகளுக்கு கல்வி வாரியம் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 23, 2021

Comments:0

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீடுகள் – பள்ளிகளுக்கு கல்வி வாரியம் உத்தரவு!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் 95% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் சதவீதத்தை குறிப்பு ஆண்டைப் போலவே பராமரிக்க வேண்டும் என அனைத்து CBSE பள்ளிகளுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவுறுத்தியுள்ளது.

தேர்வு முடிவுகள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் CBSE மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இம்மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் CBSE கல்வி வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் CBSE பள்ளிகள் மாணவர்களுக்கான இறுதி மதிப்பீடுகளை வெளியிடுவதற்கு ஜூலை 22 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இவை கடந்த 21 ஆம் தேதி அன்று, கொடுக்கப்பட்ட காலக்கெடுவை ஜூலை 25 வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பீடுகளில் 95% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் சதவீதத்தை குறிப்பு ஆண்டை (reference year) போலவே பராமரிக்குமாறு CBSE பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு இறுதி முடிவுகளைத் தயாரிக்க பள்ளிகளுக்கு CBSE கல்வி வாரியம் வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் மாற்று மதிப்பீட்டுக் கொள்கையின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எளிதான முறையில் கணக்கிடப்பட உள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 95, 96, 97, 98, 99 மற்றும் 100 மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறிப்பு ஆண்டைப் போலவே இருக்க வேண்டும் என்று CBSE கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மற்ற மதிப்பெண்களை எடுத்துள்ள மாணவர்களின் சதவீதம் குறிப்பு ஆண்டுடன் பரவலாக ஒத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் CBSE பள்ளிகள் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இறுதி செய்து சமர்ப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பள்ளிகள் கொடுக்கும் மதிப்பெண்களே இறுதியாக கருதப்படும் என விளக்கம் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews