மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி முடிவுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுகள் வெளியீடு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்த அளவீடுகளை 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் பள்ளியின் முதல்வர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட முடிவு குழுவை அமைக்குமாறு கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இறுதி மதிப்பெண் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும், மாணவர்களின் முந்தைய முந்தைய தேர்வு மதிப்பெண்களை வெவ்வேறு கட்டங்களாக சமர்ப்பிக்குமாறு சிபிஎஸ்இ வாரியம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, ஜூலை 5ம் தேதியான இன்று 12ம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்கள், அசைன்ட்மென்ட்கள் மற்றும் 12ம் வகுப்பில் பெற்ற அலகு தேர்வுகளின் மதிப்பெண்களை சமர்பிப்பதற்கான இறுதி நாளாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஜூன் மாதம் 12 ஆம் வகுப்பு முடிவுகளை தயாரிப்பதில் பள்ளிகளுக்கு உதவும் ஒரு இணைய பக்கத்தை தொடங்கியது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி முடிவை தயாரிக்க பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு வழிகாட்டு மையம் ஒன்றை அமைக்க கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அட்டவணை செயல்முறைகள் முடிந்த பின்னர் வாரியம் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்க உள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 31 க்குள் அறிவிக்கப்படும் என்று கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.