நீட் தேர்வு சிக்கலைத் தீர்க்க ஸ்டாலின் மெகா பிளான்: விடிவு பிறக்குமா? எதிரணி அஸ்திரத்தையே கையில் எடுக்க தீவிர பரிசீலனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

நீட் தேர்வு சிக்கலைத் தீர்க்க ஸ்டாலின் மெகா பிளான்: விடிவு பிறக்குமா? எதிரணி அஸ்திரத்தையே கையில் எடுக்க தீவிர பரிசீலனை

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருப்பதாக கூறப்படுகிறது. எதிரணியின் அஸ்திரத்தை தமிழ்நாடு திமுக அரசு கையில் எடுத்தால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று கூறப்படுகிறது.. அது என்ன அஸ்திரம் என்று பார்க்கலாம்! நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இந்த குழுதான் அறிக்கை அளிக்க உள்ளது.

இந்த குழு கொடுக்கும் அறிக்கையின்படி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருந்தது.

திட்டம்
ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த நீட் ஆராய்ச்சி குழுவிற்கு சென்னை ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் குறித்த ராஜன் குழுவிற்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு பாஜக தொடுத்த வழக்கில், நீட் தேர்வு குறித்து ஆராய்ச்சி செய்ய எப்படி குழு அமைக்கலாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எப்படி குழு அமைக்கலாம். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதா என்று சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்விகளை எழுப்பியது. கேள்வி

இது தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ராஜன் குழு அறிக்கை மூலம் தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கை பெறுவது கஷ்டம் என்றே கூறப்படுகிறது. எனவே தமிழ்நாடு திமுக அரசு வேறு அஸ்திரத்தை கையில் எடுத்தால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும். அதன்படி அதிமுகவின் அஸ்திரம் ஒன்றையே கையில் எடுத்து, அதை வைத்தே நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

விலக்கு

உச்ச நீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்தது. 2020 ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவில் நிறைய குறைபாடு இருந்ததால் அப்போது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. அதன்பின் மனுவில் திருத்தம் மேற்கொள்ளாமல் தமிழ்நாடு அதிமுக அரசு காலம் தாழ்த்தியது.

காரணம்
பல்வேறு காரணங்களால் இந்த மனுவில் அதிமுக அரசு திருத்தம் மேற்கொள்ளவில்லை. அதன்பின் கடைசியாக செப்டம்பர் 2020 இறுதியில்தான் மனுவில் திருத்தம் செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு என்று வகையில் இனி திமுக அரசு வாதம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் முறையான வாதங்களை வைப்பதன் மூலம் நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு காய் நகர்த்த முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews