தமிழகத்தில் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல முறை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நேற்று, திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது, அனைத்து அரசு நிறுவனங்களும் திறக்கப்பட்டு 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதுகுறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்ப வேண்டும். கொரோனாவால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஊதிய நிறுத்தம் உள்ளிட்ட பயன்களை உடனே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.