தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அப்பள்ளி ஆசிரியர்கள் புதிதாக சேரும் மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக பெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளும் கால அடடவனையை தயார் செய்து ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் என்ற முறையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்புகள் ஏழை மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே அரசு பள்ளி மாணவர்களை கருத்திற்கொண்டு தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது. இது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா இராண்டாம் அலை தீவிரமெடுக்கும் காரணத்தால் புதிய கல்வியாண்டு தொடங்கியும் பள்ளிகளை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது விண்ணப்ப படிவத்திற்கு கட்டணம் வசூலிப்பதை அரசு தடை செய்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அப்பள்ளி ஆசிரியர்கள் புதிதாக சேரும் மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி மற்றும் படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்க அப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து குழுவாக சேர்ந்து மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இந்த ஊக்கத்தொகை வழங்க அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.