தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை டிஎன்பிஎஸ்சி திரும்பப்பெற வேண்டும் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேல்முறையீடு செய்திருக்கிறது. இது தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இழைக்கப்படும் மிகப்பெரிய சமூகஅநீதியாகும்.
தமிழ்வழி இட ஒதுக்கீட்டைமுறைகேடாக அனுபவிப்பவர்களை தடுக்க வேண்டும் என்பதுதான் புதிய சட்டத்தின் நோக்கம்.
2016-19 கால கட்டத்தில் முதல் தொகுதி பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 22 பணிகளில் 11 பணிகளை, ஒன்றாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்து, இறுதியில் பெயரளவில் ஒரு பட்டப் படிப்பை அஞ்சல் வழியில் தமிழில் படித்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். இது மிகப்பெரிய சமூகஅநீதி. அத்தகைய அநீதி மீண்டும்இழைக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. புதிய சட்டத்தின்படி முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டால், மொத்தம்10 முதல் தொகுதி பணிகள், ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரைதமிழில் படித்தவர்களுக்கு மட்டும்கிடைக்கும். அதுதான் உண்மையான சமூகநீதியாகவும், தமிழ் நீதியாகவும் இருக்கும்.
அதை உறுதி செய்யும் வகையில், உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.