கருணை அடிப்படையில் பணி வரன்முறை நடவடிக்கை – வருவாய்த்துறை செயலர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 05, 2021

Comments:0

கருணை அடிப்படையில் பணி வரன்முறை நடவடிக்கை – வருவாய்த்துறை செயலர் உத்தரவு!

தமிழகத்தில் 5 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டும், பணி வரன்முறை செய்யப்படாமல் நிலுவையில் உள்ள துறைகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

வருவாய்த்துறை செயலர் உத்தரவு: தமிழகத்தில் 5 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு, பணி வரன்முறை செய்யாமல் நிலுவையில் பலர் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் அவர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்கள் பணியினை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2016 பிப்ரவரி 1ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட எந்தவித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அரசு பணியாளரின் பணியினை சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்களை வரன்முறை செய்யலாம். கிராம நிர்வாக அலுவலருக்கு பணி நியமன அலுவலர், கோட்டாட்சியராகவும், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பணி நியமன அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது) என்ற நிலையில், ஒரு நிலை கூடுதல் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் (அல்லது) மாவட்ட ஆட்சியர் பணி நியமன அலுவலராக இருக்கும் பட்சத்தில் ஒரு கூடுதல் அதிகாரம் பெற்ற அலுவலர் என்ற நிலையில் கூடுதல் தலைமை செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அவரவர் கட்டுபாட்டின் கீழ் உள்ள கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு பணியாளரின் பணியினை வரன்முறை செய்யலாம். கடந்த 2016 மார்ச் 2ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணை வெளியிட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணிவரன்முறை செய்யாமல் நிலுவையில் உள்ள இனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews