ரூ.750 உதவித்தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 05, 2021

Comments:0

ரூ.750 உதவித்தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிறுவன மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழில்பயிற்சி மற்றும் அரசின் உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்த கல்வி ஆண்டிற்கான (2021 -2022) பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீடு, காலிப்பணியிடங்கள் மற்றும் பயிற்சிகள் குறித்த விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் இணைந்து படிக்க விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 8 ஆம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையத்தில் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலையும் சேர்த்து பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். கல்வி சான்றிதழுடன் முன்னுரிமை கோரும் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்தால் மாணவர்களுக்கு அரசின் சார்பில் மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகம், காலணி, சீருடை, வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட இருக்கின்றது. கூடுதலாக, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இருந்து மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 750 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 93801 14610, 80722 17350, 97896 95190 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews