2019-2020ஆம் கல்வியாண்டில் 25 சதவீத பழங்குடியின மாணவர்களும், 20 சதவீத பட்டியலின மாணவர்களும் தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு கல்வியாண்டிலும், பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் புதிதாக சேருகின்றனர், எத்தனை மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை யு.டி.ஐ.எஸ்.இ. (UDISE) மூலம் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2019-2020-ம் கல்வியாண்டுக்கான புள்ளி விவரங்களில், நாடு முழுவதும் 25 சதவீத பழங்குடியின மாணவர்கள் 9, 10-ம் வகுப்புகளை முடிக்காமலேயே வெளியேறியதாகவும், 20 சதவீத பட்டியலின மாணவர்கள் 9,10-ஆம் வகுப்புகளில் இருந்து இடை நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லியில் அதிகளவில் பட்டியலின மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடைநிற்றல் சதவீதம் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக, பொருளாதார, கற்றல் - கற்பித்தல் சூழல் இல்லாததால் பட்டியலின மாணவர்களை விட பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்க காரணம் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.