தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த நாளை முறையான நியமன நாளாக கணக்கில் கொள்ள வேண்டும் என செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பணிநியமன ஆணை:
தமிழகத்தில் கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமனம் நாளை வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் சார்பில் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் மூலம் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த ஆசிரியர்கள் பணிக்கு சேர்ந்த முதல் நாளை நியமன நாளாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதே போல அந்த ஆசிரியர்களின் பதிவேட்டில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மீது பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பத்தூர் மாவட்டம், கஸ்பா உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் எஸ்.ஜான்சி சந்திரவதினி என்பவரது ஆவணங்களை பரிசீலனை செய்த பின்னாக, அவர் கடந்த 06.01.2009 ல் பணி நியமன ஆணை பெற்று 07.01.2009 அன்று பணியில் சேர்ந்துள்ளார். எனவே கொடுக்கப்பட்டுள்ள அரசாணையின் படி, 6.1.2009 ல் பணி ஆணை பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியரின் பணி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி, பணியில் சேர்ந்த முதல் நாளை நியமனமாக கருதி, 31.5.2013 ல் வழங்கப்பட்ட ஆணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.