தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் குறித்தும் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் 2வது அலை தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் தினசரி 35 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்ட புதிய பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஜூலை 12ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாநிலங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகளவு பாதிக்கும் என்பதால் பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவெடுப்பதில் பல்வேறு மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் பள்ளிகள் திறப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள், இம்மாத இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதனை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.