'தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக குறைக்கக் கூடாது' என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் மாயவன், செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் கூறியிருப்பதாவது:அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஓய்வு வயதை குறைக்காமல் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு தரமுடியும். கல்வித்துறை உட்பட பல துறைகளில் காலியிடங்களை நிரப்பலாம். ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:25 ஆக மாற்றி புதிய பணியிடங்களை உருவாக்கலாம்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமிக்கலாம். பணியாற்றுவோரில் பலர் 48 வயதில்தான் பணிவாய்ப்பு பெற்றனர். எனவே அவர்களின் ஓய்வு வயதை குறைக்க தேவையில்லை. மத்திய அரசு ஊழியர்களைப் போல தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் 60 வயதையே ஓய்வு வயதாக இருக்க செய்வதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.