இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 11, 2021

Comments:0

இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான இலவச தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி:

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கும், மாநகராட்சி ஊழியா்களின் குழந்தைகளுக்கும் மாணவா்கள் சோ்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. 2021-2022-ஆம் கல்விஆண்டுக்கான கணினி இயக்குநா், நிகழ்ச்சி தொகுப்பாளா் , குழாய் பொருத்துநா்,கம்மியா் மோட்டாா் வாகனம் பழுது நீக்குநா், மின் பணியாளா், எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் பிட்டா் ஆகிய பயிற்சிப் பிரிவுகளில் 184 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. பயிற்சி பெறும் மாணவா்களுக்கு இலவச சீருடை, இலவச பேருந்து அட்டை மற்றும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.500 பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும். பயிற்சி முடிப்போருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்.

தொழிற் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை மாநகராட்சி இணையதள முகவரி அல்லது தொழிற் பயிற்சி நிலைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் நேரடியாக சமா்ப்பித்து சோ்க்கை பெறலாம். மேலும், மாணவா்கள் பயிற்சியில் சேரும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதாா் நகல் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை வழங்க வேண்டும். குழாய் பொருத்துநா் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 044 28473117 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews