ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு முக்கிய ஆவணமான ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை எவ்வாறு சேர்ப்பது மற்றும் மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். ஆதார் அட்டை:

நாடு முழுவதும் அனைத்து சேவைகளுக்கும் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து சமையல் சிலிண்டர் பெற கூட ஆதார் அட்டை தேவைப்படுகிறது. மேலும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த கூட ஆதார் அட்டை அவசியமாகும். இந்நிலையில் இந்த ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதனை எளிதாக்க UIDAI இணையதளம் பயனுள்ளதாக உள்ளது.

இந்த பதிவில் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை சேர்க்க அல்லது புதிய மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து காணலாம். பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்ற சேவை புதுப்பிப்பு போர்ட்டலை (எஸ்.எஸ்.யு.பி) பயன்படுத்துவதன் மூலமோ அல்லது ஆதார் சேர்க்கை மையத்திற்கான உள்ளூர் நிரந்தர சேர்க்கை மையத்தை அணுகி புதுப்பித்து கொள்கின்றனர். மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

முதலில் UIDAIயின் இணையதளமான ask.uidai.gov.in செல்ல வேண்டும்.

அதன்பிறகு, நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.

அதன் பின்னர் SEND OTP Option யை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் OTP ஐ உள்ளிட வேண்டும். பின்னர் ‘Submit OTP & Proceed’ விருப்பத்தை கொடுக்க வேண்டும்.

அடுத்து, ‘ஆன்லைன் ஆதார் சேவைகள்’ என்று சொல்லும் கீழ்தோன்றும் மெனுவில், நீங்கள் புதுப்பிக்க விரும்பும் ஒன்றைக் கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண்ணைப் புதுப்பிக்க என்ற Option கிளிக் செய்ய வேண்டும். பின்னர் புதிய மொபைல் எண் குறித்த விவரங்களை வழங்க வேண்டும். மற்றும் ‘நீங்கள் என்ன புதுப்பிக்க விரும்புகிறீர்கள்’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மொபைல் எண் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும் மற்றும் ஒரு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.

இது உங்கள் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP ஐ சரிபார்த்து, ‘சேமி மற்றும் தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், ஆதார் மையத்திற்குச் சென்று ரூ.25 கட்டணம் செலுத்தவும், தேவைப்படும் கூடுதல் தகவல்களை வழங்கி பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews