தமிழ்நாட்டில் பள்ளிகளை விரைவில் தொடங்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 36,000 என்ற அளவிலிருந்து 2500 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இதில் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பெற்றோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். வல்லுனர் குழு அமைத்து, மருத்துவ, உளவியல் நிபுணர்கள் கருத்துக்களுடன் அரசுக்கு அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பள்ளிகளைத் திறக்கும் முன், அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து, அதை பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.