Breaking

Sunday, July 18, 2021

90 ஆயிரம் மாத சம்பளத்தில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி

90 ஆயிரம் மாத சம்பளத்தில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ரூபாய் 90 ஆயிரம் மாத சம்பளத்தில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்றும், மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர் தேவை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 27 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog