இந்திய வருமான வரித்துறை அறிவிப்பு – ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

இந்திய வருமான வரித்துறை அறிவிப்பு – ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

கடைசி தேதி அறிவிப்பு:
இந்திய அரசின் வருமானவரி சட்டம் 1961-ன் படி, 15 CA,15 CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர், வெளிநாட்டு பணம் பெற்றிருந்தால், 15 CA படிவத்தை, பட்டய கணக்காளர் சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் நகலை தாக்கல் செய்வதற்கு முன்பாக, மின்னணு தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதற்கான இணையதளம் www.incometax.gov.in அண்மையில் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த இணையதளத்தில் படிவங்களை தாக்கல் செய்ய சில சிக்கல்கள் ஏற்பட்டது. இது குறித்து வருமான வரித்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்ய ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று மின்னணு பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் படிவங்களை ஆகஸ்ட் 15ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். அதே போல வெளிநாட்டு பணம் பெற்றதற்கு, இந்த படிவங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளும்படி, அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews