தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையை சரி செய்ய முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் படி அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அவை காலை முதல் மாலை வரை பள்ளிகள் திறக்கும் நேரம் போலவே நடத்தப்படுகிறது. ஆனால் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படாமல் உள்ளன. எனவே இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிவடையாமல் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை முழுமை பெற்றுள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இருந்தே 11 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும். ஆனால் தற்போது மாணவர்கள் நலன் கருதி ஜூலை மாதமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களை வாட்ஸ்ஆப் மூலமாக ஒருங்கிணைத்து இன்று முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.