Windows 10 பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 16, 2021

Comments:0

Windows 10 பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியீடு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உருவாக்கமான விண்டோஸ் 10 வருகிற 2025ம் ஆண்டுக்கு மேல் இயங்காது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.
விண்டோஸ் 10:
கடந்த 1985ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் கணினி வரைகலை சூழல் இயங்குதளமான விண்டோஸ் என்பதை அறிமுகம் செய்தது. அப்போதைய காலத்தில் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தளத்தை மேம்படுத்தி புது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது லேட்டஸ்ட் வெர்சனாக விண்டோஸ் 10 நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் விண்டோஸ் 10 வருகிற 2025ம் ஆண்டுக்கு மேல் இயங்காது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. காரணம் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸின் புதிய பதிப்பு வருகிற ஜூன் மாதம் 24 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. புதிய பதிப்பு அறிமுகமாக உள்ளதால் பழைய பதிப்பான விண்டோஸ் 10, 14 அக்டோபர் 2025ம் ஆண்டு முதல் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 கடந்த ஜூலை 29,2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பதிப்பு பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று அனைவரையும் கவர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய பதிப்பு அறிமுகப்படுத்த உள்ளதால் இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் சற்று ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்டோஸ் புதிய பதிப்பின் அம்சங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 10 பதிப்பை 62.16 சதவிகித பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews