தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி டிவி வாயிலாக பாட வாரியாக பாடங்கள் ஒளிபரப்பப்பட்டது. கொரோனா பரவல் மெல்ல குறைந்த நிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுக்கு தயார் படுத்தப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. முன்னதாக கல்வி ஆண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறைவாகவே நடைபெற்றதால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டத்தில் இருந்து 30% குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று கருதி முதலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு திட்டத்தின் படி மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டது. தற்போது தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிகள் தமிழக அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று இதற்கு மறுப்பு தெரித்துள்ளனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.