கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் அடுத்த கல்வியாண்டு துவங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.
செமஸ்டர் தேர்வு
கொரோனா தொற்றிலிருந்து கர்நாடகா மாநிலம் மீண்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உயர்கல்வி அமைச்சர் டாக்டர் அஸ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான முயற்சியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கர்நாடக மாநில நகரங்களில் செயல்படும் கல்லூரிகளுக்கு மாலை நேர வகுப்புகளை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தவிர விஸ்வேஸ்வரய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சில கல்லூரிகளில் இடை-ஒழுங்கு திட்டங்களை தொடங்குவதற்கான விருப்பங்கள் தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு அக்டோபர் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என டாக்டர் அஸ்வத்நாராயண் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.