NEET UG, JEE Mains நுழைவுத்தேர்வுகள் ரத்து? 15 நாட்களில் முடிவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 06, 2021

1 Comments

NEET UG, JEE Mains நுழைவுத்தேர்வுகள் ரத்து? 15 நாட்களில் முடிவு!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் ஜே.இ.இ மெயின் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகிய இரண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என்பதை தீர்மானிக்க மறுஆய்வுக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வுகள் ரத்து:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது சிரமம் என்பதால் ஏற்கனவே சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும், மாணவர்கள் நலன் கருதி தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி உத்தரகாண்ட், ஒடிசா குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உட்பட 10 மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தன. அதே போல தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்திலான பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் நீட் தேர்வும் ரத்து செய்யப்படுமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே ஜேஇஇ – மெயின் நுழைவு தேர்வு, நீட் தேர்வு நடைபெற இருந்து கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஜே.இ.இ மெயின் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகிய இரண்டும் வரும் ஆகஸ்டில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவது குறித்து மறு ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அடுத்த 15 நாளில் தேர்வு நடத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews