CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி அமைச்சர் நாளை பதில்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி அமைச்சர் நாளை பதில்!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண்கள் மற்றும் கல்வி முறை குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நாளை மாலை 4 மணிக்கு சமூக ஊடகம் வாயிலாக பதிலளிக்க உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் நிஷாங்க் அறிவித்துள்ளார்.

சமூக ஊடக சந்திப்பு:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டின் அடிப்படையிலும், 10 மதிப்பெண்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும். அதில், 40 மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இருந்து, 30 மதிப்பெண்கள் இடை பருவத்தேர்வுகளில் இருந்து, 10 மதிப்பெண்கள் பள்ளிகளில் அவ்வப்போது நடந்த தேர்வுகளில் இருந்து கணக்கிடப்பட இருக்கிறது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு 11ம் வகுப்பு இறுதி தேர்வின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும், 10ம் வகுப்பு இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும், 12ம் வகுப்பு இடைப்பருவ தேர்வுகளில் எடுத்துள்ள மதிப்பெண்கள் 40% அளவிற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரையும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தொகுக்க பள்ளிகளுக்கு ஜூலை 15 வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சரிடம் சமூக ஊடகங்கள் மூலமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு பிறகான பாதிப்புகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் நிலையிலும், மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக நாளை ஜூன் 25ம் தேதி மாலை 4 மணி அளவில் சமூக ஊடகம் வாயிலாக சந்திப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வுகள் தொடர்பான வேறு ஏதேனும் கேள்வி உங்களிடம் இருந்தால், நீங்கள் எனக்கு ட்விட்டர், பேஸ்புக் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் என்று தனது டிவீட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews