தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை பரவல் – தடுப்பு வழிமுறைகள் இதோ!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று குறைந்து வரும் நேரத்தில் செப்டம்பர் – அக்டோபரில் பரவ காத்திருக்கும் கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது. கொரோனா 3 ஆம் அலை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரது நெருக்கமான சொந்தங்கள் உயிரிழந்துள்ளனர். அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலாந்து, கனடா, சிங்கப்பூர், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் 3 ஆவது கொரோனா அலை தொடங்கி விட்டது.
அதே போல இந்தியாவில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் கொரோனா 3-ஆம் அலை தாக்கம் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். கொரோனா 3 ஆம் அலையை எதிர்கொள்ள தமிழக மக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை,
முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தபட வேண்டும். கொரோனா 3 ஆம் அலை குறிப்பாக குழந்தைகளை தாக்கும் என்பதால் குழந்தைகளுக்கான சோதனை ஓட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு 5 கோடி தடுப்பூசிகளுக்கு டெண்டர் புள்ளி கோரியுள்ளது. பழைய டெண்டரில் உள்ள குறைகளை ஆராய்ந்து விரைவில் புதிய டெண்டரை கோர வேண்டும்.
பெரிய நிறுவனங்களை ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க செய்து ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
திரவ ஆக்ஸிஜனை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ரயில்வே, விமான நிலையங்களை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போடும் பணியை கிராமங்களில் அதிகரிக்க வேண்டும். அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்த அங்கிருந்து பெற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
மேலும் கொரோனவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் அவை அனைத்தையும் நீடிக்க முடியாது. எனவே மக்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.