பிளஸ் 2 மதிப்பெண் கொண்டு தான் உயர்கல்வி சேர்க்கை நடக்க இருப்பதால், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு, கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.கொரோனா தொற்று காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.சி.பி.எஸ்.இ., சார்பில், மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால், மாநில அரசும் முடிவுகளை இறுதி செய்யாமல், தாமதம் காக்கிறது. மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து, கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.சதீஷ்குமார், மாநில ஒருங் கிணைப்பாளர், கல்வியாளர் சங்கம்:மற்ற வகுப்புகளை போல அல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கை, சில போட்டித்தேர்வுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மதிப்பீட்டு நடைமுறை அறிவிக்கும் முன், குளறுபடிகள் இருப்பது தெரியவந்தால், மேற்கொள்ளப்படவுள்ள துறை ரீதியான நடவடிக்கை குறித்தும் வெளியிட்டு, நேர்மையான மதிப்பீட்டு முறையை உறுதி செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து, 30 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் இருந்து 30 சதவீதம், பிளஸ் 2வில் பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கலாம். மீதமுள்ள, 10 சதவீத மதிப்பெண்களுக்கு, அந்தந்த பள்ளி மதிப்பீட்டு குழு வழங்குமாறு தெரிவிக்கலாம்.
பீட்டர்ராஜா, மாநில தலைவர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மட்டுமே, முறைப்படி நடந்துள்ளது. பள்ளி அளவிலான தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவிடவில்லை. செய்முறை பாடங்களுக்கு, 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில், 20 சதவீதம், பிளஸ் 1 மதிப்பெண்களில் 50 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம். செய்முறை அல்லாத பாடங்களுக்கு, அகமதிப்பீட்டு தேர்வாக, பள்ளிகள் சார்பில், 10 மதிப்பெண் வழங்கப்படும். மீதமுள்ள, 90 மதிப்பெண்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து, 30 சதவீதமும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் இருந்து, 60 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடலாம். பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே, கணக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இருக்கும்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.