இந்தியாவில் ராணுவப்பணிக்கான பொது நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதி சீட்டுகள் ஜூலை 1 முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி சீட்டு
இந்தியா ராணுவத்தில் உள்ள சில குறிப்பிட்ட பணிகளுக்காக ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து அதற்கு தகுதியான நபர்களுக்கான பொது நுழைவுத்தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த நுழைவுத்தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வாளர்களுக்கான அனுமதி சீட்டுகள் ஜூலை 1 முதல் கொடுக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்திய ராணுவத்தில் உள்ள கிளார்க், செவிலியர், ஸ்டோர் கீப்பர் பணிக்காக ஆள் சேர்ப்பு முகாம், திருவண்ணாமலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி தேர்வுகள்சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதி சீட்டுகள் ஜூலை 1 முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் அனுமதி சீட்டுகளை தேர்வாளர்கள், சென்னை கோட்டையில் உள்ள இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தில், வரும் ஜூலை 1 ஆம் தேதி அன்று காலை 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 044 2567 4927 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.