தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் கணக்கீடு குறித்து தமிழக அரசு அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள்:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி வகுப்பில் சேர்வதற்கு மதிப்பெண்கள் தேவைப்பட்டு வந்தது. தேர்வு நடைபெறாத நிலையில் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்று கல்வித்துறை குழம்பி வந்தது. இதை அடுத்து பள்ளி கல்வித்துறை செயலர் தலைமையில் தமிழக அரசு ஓர் குழு நியமித்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த குழு ஆலோசனை செய்து தமிழக அரசுக்கு 5 வகையான கணக்கீட்டு வழிமுறைகளை பரிசீலினை செய்தது. இதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் நேற்று (ஜூன் 25) முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்
இந்நிலையில் தற்போது தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் 50% (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள்), 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் 30% கணக்கிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அச்சம் காரணமாக பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு பிளஸ் 1 செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பில் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பின் எழுத்து தேர்வில் இருந்து மதிப்பெண்கள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிளஸ் 1 வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடத்தில் மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால் அவர்களுக்கு 35 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல் இந்த மதிப்பெண்கள் போதாது என்று கருதும் மாணவர்களுக்கு பின்பு தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களாக கருதப்படும். மேலும் தனித்தேர்வர்களுக்கு கொரோனா தொற்று காலம் முடிந்த பின் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூல் 31ம் தேதிக்குள் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.