Breaking

Tuesday, April 27, 2021

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான டிசம்பர் மாத தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் - கல்வித்துறை உத்தரவு
தேர்வு முடிவுகள் வெளியீடு:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, பி.ஜி., டிப்ளமோ பிரிவு, டிப்ளமோ பிரிவு, சான்றிதழ் பிரிவு ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. கொரோனா தாக்கம் காரணமாக இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. ஆனால் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.algappauniversity.ac.in என்ற இணையதளம் மூலமாக இந்த தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் முடிவுகள் தெரிந்து கொண்ட பின்னர் விடைத்தாள்கள் பெற விரும்பினால் தேர்வு முடிவுகள் வெளியாகி 7 நாட்களுக்குள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு - இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு
மேலும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம். நேரடியாக மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog