"தேர்தல்‌ பணியில்‌ ஆசிரியர்கள்‌ படும்பாடு" - ஆசிரியர்களுக்கான விரிவான கட்டுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 07, 2021

Comments:0

"தேர்தல்‌ பணியில்‌ ஆசிரியர்கள்‌ படும்பாடு" - ஆசிரியர்களுக்கான விரிவான கட்டுரை

ஊரடங்கின்‌ தீவிரம்‌ முடிந்து பள்ளிகள்‌ திறந்து 9 முதல்‌ 12 வரை வகுப்புகள்‌ கொஞ்சம்‌ கொஞ்ச மாக அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளுடன்‌ இயங்க ஆரம்பித்தது சற்றே ஆறுதலான செய்தியாக இருந்தது எனலாம்‌. ஆனால்‌ இரண்டு மாதங்களே இவையெல்லாம்‌ நீடித்தன. மீண்டும்‌ தொற்று பரவ ஆரம்பித்தது பள்ளி களையும்‌ விட்டு வைக்கவில்லை. ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌ என அனைவரும்‌ நோய்த்‌ தொற்‌ றுக்கு ஆளாக ஆரம்பிக்கும்போது மீண்டும்‌ 9, 10,11 வகுப்பு மாணவர்கள்‌ பள்ளிக்கு மார்ச்‌ 22. முதல்‌ வரத்‌ தேவையில்லை என அரசு அறிவித்‌ தது. 12ஆம்‌ வகுப்புகள்‌ பொதுத்‌ தேர்வு அறிவிப்‌ பினையொட்டி தொடர்ந்து இயங்குகின்றன. இவற்றையே கல்விச்‌ சூழலின்‌: இன்றைய ஒரு வரி செய்தியாகக்‌ கொள்ளலாம்‌. மற்றொரு புறம்‌ ஜனநாயகத்‌ திருவிழாவான தேர்தல்‌ நாள்‌ நெருங்கிக்‌ கொண்டுள்ள தருணத்தில்‌ கல்விச்‌ சூழலின்‌ முக்கியக்‌ காரணிகளான ஆசிரியர்கள்‌ இதனுடன்‌ தொடர்புடையவராக உள்ளனர்‌ என்பதை நாம்‌ மறுக்க முடியாது. வழக்கமான தேர்தல்‌ பணி நடைமுறைகளைக்‌ கடந்து தற்போதைய 2021 சட்டமன்றத்‌ தேர்தல்‌ பணிகள்‌, பல அழுத்தங்‌ களை ஆசிரியர்களுக்குத்‌ தருவதாக பரவலான கருத்துகள்‌ தமிழகமெங்கும்‌ ஆசிரியர்களிட தேர்தல்‌ பணியில்‌ ஆசிரியர்கள்‌ படும்பாடு மிருந்து வருகின்றன. அதைக்‌ குறித்து உங்கள்‌ அனுபவங்களைக்‌ கூறுங்கள்‌ என்று ஆசிரியர்களைக்‌ கேட்டிருந்‌ தோம்‌. கடமையைச்‌ செய்ய யாரும்‌ மறுக்கவில்லை. ஆனால்‌ ஆசிரியர்களை அதிக தூரம்‌ அலைய வைப்பதுதான்‌ எரிச்சலடைய வைக்கிறது. கொரோனா அச்சம்‌ சற்று கவலையைத்‌ தருகிறது. சரியான வசதிகள்‌ செய்யாமல்‌ இருப்பது. பெண்களுக்கு சிரமம்‌ அதிகமாக இருக்கிறது என நிறைய கருத்துகள்‌ வந்துள்ளன. வாக்குப்‌ பதிவு முடிந்து திரும்பும்போது எந்த விதமான போக்குவரத்து வசதியும்‌ இருக்காது. நடுஇரவில்‌ நடு ரோட்டில்‌ நின்ற அனுபவம்தான்‌. பல தேர்தல்‌ பணிகளில்‌ கிடைத்தது. தேர்தல்‌ ஆணையம்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ ஊழியர்களை மனிதர்களாக நினைப்பது இல்லை என்ற வருத்தமான பகிர்வுகளையும்‌ முன்வைக்கின்றனர்‌. சில இடங்களில்‌ மருத்துவ விடுப்பில்‌ உள்ளவர்களை நேரில்‌ வரவழைத்து மருத்துவக்‌ குழுவினர்‌ முன்‌ சோதனை செய்த நிகழ்வைக்‌ குறித்து சொல்லும்‌ ஒரு தகவலைக்‌ கேட்கும்‌ போதே மற்றொருவர்‌ கூறுவது திடுக்கிட வைக்‌: கிறது. ஒருவர்‌ கொரோனா பாதிப்பில்‌: இருக்கும்போது தேர்தல்‌ பணிப்‌ பயிற்சிக்கு. அவரால்‌ வர இயலவில்லை. குறிப்பிட்ட நபர்‌ வென்டிலேசனில்‌ இருப்பதைப்‌ புலனத்தில்‌: படமாக அனுப்பித்‌ தெரிவிக்கும்‌ போது அதை ஏற்காமல்‌, நேரில்‌ வந்து மருத்துவச்‌ சான்றை: ஒப்படைக்கக்‌ கூறியதும்‌, அதே போல்‌ கோவிட்‌ 19 பாதிப்புள்ளவர்‌ நேரடியாக: வந்து மருத்துவச்‌ சான்றை ஒப்படைத்துச்‌ சென்றதும்‌ கூடுதல்‌ அதிர்ச்சி. கடுமையான உடல்‌ நலம்‌ பாதிக்கப்பட்டு தொடர்‌ சிகிச்சையில்‌ உள்ளவர்களையும்‌, கருவுற்று இருக்கும்‌ சகோதரிகளையும்‌ பணி யேற்கச்‌ சொல்லித்‌ திணிக்கிறது இன்றைய அணுகுமுறை. சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின்‌ நியாமான குறைகளைக்கூட காது கொடுத்துக்‌. கேட்க முடியாத அலட்சியப்‌ போக்கிலேயே இன்றைய தேர்தல்‌ பணி திணிக்கப்படுகிறது. என்கிறார்கள்‌. தேர்தல்‌ பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள்‌. பெரும்பாலானோருக்கு 70 கி.மீ, தூரத்திற்கும்‌ அதிகமான தொலைவில்‌ பணியாணை வழங்கப்‌ பட்டுள்ளது. குறிப்பாக சிதம்பரம்‌, குமராட்சிப்‌' பகுதி ஆசிரிய சகோதரிகள்‌ பலருக்கு திட்டக்‌ குடியில்‌ பணி வழங்கப்பட்டுள்ளது என்கிற தகவலையும்‌ கடலூர்‌ மாவட்ட ஆசிரியர்கள்‌ பகிர்கின்றனர்‌. தொடர்ந்து 13 மணி நேரம்‌ இடைவெளி 'ன்றிப்‌ பணியாற்ற வேண்டிய சூழலை மனித உரிமை மீறலாகவே கருதுகிறேன்‌ என்கிறார்‌. ஆசிரியர்‌ ஒருவர்‌. குறிப்பாக, பெருந்தொற்றுக்‌ காலத்தில்‌ பணி செய்வது மிகக்‌ கடினம்‌. 100 கிலோ மீட்டர்‌ கடந்து தேர்தல்‌ பணி, இதற்குமேல்‌ அங்கிருந்து வாக்குச்சாவடிக்கு இன்னும்‌ எவ்வளவு தூரம்‌ பயணப்பட வேண்டி. இருக்குமோ? என்ற வினாவையும்‌ முன்வைக்‌. கின்றனர்‌. கொடைக்கானலில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்‌ ஜான்‌ பெளலா, தனது பயிற்சி முதல்‌ முறை பனியிலும்‌ இரண்டாம்‌ வகுப்பு திண்டுக்கலிலும்‌ நடைபெற்றது. 37 கிலோ மீட்டர்‌ பேருந்து வசதியே இல்லாத பகுதி அது. இரு பயிற்சி வகுப்புகளுக்கும்‌ தனி வாகனம்‌. வைத்துச்‌ சென்று வர [] பத்தாயிரம்‌ ரூபாய்க்கும்‌. கல்வி அதிக மாகி விட்டது எனக்‌ கூறுவதை நம்புவது, சிரமமாக இருந்தாலும்‌, உண்மை இதுதான்‌ என்பது, பலரது குரல்‌. பணி, நிலைக்கு ஏற்றவாறு தேர்தல்‌ பணி வில்லை, பணியில்‌ இளையவருக்கும்‌ பதவியில்‌ இளையவருக்கும்‌ வாக்குச்சாவடி. தலைமை அலுவலர்‌ பதவி வழங்கப்பட்டுள்ளது. பணிகள்‌ விருப்பத்துடன்‌ கூட மாற்றம்‌ செய்ய இயலவில்லை. தேர்தல்‌ பணி எப்பொழுதும்போல்‌. மன அழுத்தமானது. இவ்வளவு தொழில்‌: நுட்பங்கள்‌ வளர்ந்த போதும்‌, இன்னும்‌ கூட தபால்‌ ஒட்டு நடைமுறை மாற்றப்படவேண்டும்‌.. தேர்தலுக்கு முன்பே ஈவிஎம்‌ மூலம்‌ வாக்க ளிக்கும்‌ முறை வரவேண்டும்‌ பணியில்‌: ஈடுபடும்‌ அரசு ஊழியர்களுக்கு என்கின்றனர்‌. தேர்தல்‌ மதிப்பூதியம்‌ என்ற பெயரில்‌ _ தரப்படும்‌ சொற்ப கனதியத்தைத்‌ தாண்டி பெரும்‌ செலவு செய்ய வேண்டியுள்ளது. தேர்தலுக்கு. முந்தைய இரண்டு நாள்‌ பயிறசிக்குச்‌ சென்று வருவது, ஒரு நாள்‌ தேர்தலுக்கு இரண்டு முழு நாட்கள்‌ பணியாற்றுவது என 4 (அ) 5 நாட்கள்‌ செய்யப்படும்‌ பணிக்கு மதிப்பூதியம்‌ மிகக்‌குறைவு என்ற கருத்தும்‌ முன்‌ வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும்‌ தேர்தல்‌ பணியை ஆசிரியர்கள்‌ சரியாக நியாயமாக நேர்மையாகச்‌ செய்வதால்தான்‌ தேர்தல்‌ சரியாக நடக்கிறது என்கின்றனர்‌ ஆசிரியர்கள்‌. வாதுமக்கள்‌ பார்வை. பள்ளிக்கூடமே நடக்கல, தேர்தல்‌ பணி பார்த்தால்‌ என்ன? இது எல்லா தேர்தல்‌ காலத்திலும்‌ ஆசிரியர்கள்‌ பங்கெடுப்புடன் தானே நடக்கிறது? பள்ளிக்கூடம்‌ நடந்து, அதோட நிறைய மாற்றங்கள்‌ நடந்துகொண்டுதான்‌. இருக்கும்‌. அதை உள்வாங்கி போய்ட்டே இருக்‌: கணும்‌. இப்படியான கருத்துகள்‌ பொதுவில்‌: முன்வைக்கப்படுகின்றன.. உண்மையில்‌ என்ன நடக்கிறது? தமிழகமெங்கும்‌ அனைத்து மாவட்டங்‌ களிலும்‌ தேர்தல்‌ பணிகள்‌ முடக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமான 60,000. வாக்குச்‌ சாவடிகள்‌ என்பவை கொரோனா. பெருந்தொற்றின்‌ காரணமாக 90,000 என ஏறக்குறைய முப்பதா மிரம்‌ வாக்குச்‌ சாவடிகள்‌ அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே பணி செய்வதற்காக நேர்மாறல்‌, விகிதம்தான்‌, சாவடிகளின்‌ எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வேலை செய்யும்‌ நபர்களின்‌ எண்ணிக்கையும்‌ அதிகரித்ததன்‌. விளைவே யாவரையும்‌ விட்டு வைக்காமல்‌ ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌ என எல்லோரை யும்‌ தேர்தல்‌ பணிக்கு ஈடுபடுத்த நிர்ப்பந்திக்கிறது தேர்தல்‌ ஆணையம்‌. இதில்‌ ஆண்‌, பெண்‌, நோயாளி, ஒய்வு பெறும்‌ வயது என்ற எந்தப்‌ பாகுபாடுமில்லை. ஏதாவது தனிப்பட்ட முறையில்‌ உடல்‌, குடும்பம்‌ சார்ந்த பிரச்சனைகள்‌ என்று உயரதிகாரிகளை அணுக முயன்றால்‌, கலெக்டர்‌ ஆர்டர்‌ என ஒரே பதில்‌, "மாவட்ட ஆட்சியர்‌ ஆணையிட்டு இருக்கலாம்‌. ஆனால்‌ உண்மையாகவே இயலாத சூழலில்‌ ஒருவர்‌ என்ன செய்வது?” என்ற கேள்விக்கு பதிலில்லை. பெரும்பாலான மாவட்டங்களில்‌ ஒரு வாக்குச்‌ சாவடிக்கு, தலைமைத்‌ தேர்தல் அலுவலர்‌ (80), தேர்தல்‌ அலுவலர்கள் ஏப்ரல்‌ 1-5,2021 1, 80 2, 60 3 என்ற அளவில்‌ ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்‌ 4 பேர்‌ என பணி நியமனம்‌. செய்துள்ளனர்‌. ஆனால்‌ செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில்‌ ” மூன்று பேர்‌ மட்டுமே நியமனம்‌ செய்துள்ளனர்‌. அதே போல தமிழகம்‌ முழுக்க எழுத படிக்கத்‌ தெரியாதவர்களை P02. நிலையில்‌: நியமனம்‌ செய்துள்ளதைக்‌ குறித்தும்‌, தமிழ்‌ மொழி தெரியாத வட இந்திய நபர்களை 60% முதல்‌ அனைத்து வேலைகளுக்கும்‌ நியமித்‌ துள்ளது. குறித்தும்‌ தெரிய வருகிறது. இது மட்டுமல்ல, சேலம்‌ மாவட்டத்தில்‌ கல்லூரி! விரிவுரையாளரை P03 பணிக்கும்‌, இன்னும் சில மாவட்டங்களில்‌ நடுநிலைப்‌ பள்ளி. தலைமை ஆசிரியர்களை 02, 603 இடங்களில்‌ நியமித்துள்ளனர்‌. ஊதிய விகிதம்‌ அனுபவம்‌. சார்ந்தே இந்த நியமனங்கள்‌ இருக்கும்‌, இருக்க வேண்டும்‌. ஆனால்‌ நிறைய முரண்பாடுகள்‌. இரண்டு பணி ஆணைகள்‌ (யற்ற ஆசிரியர்கள்‌ ஒரு சில ஆசிரியர்களுக்கு இரண்டு பணி ஆணைகள்‌ வந்திருப்பதும்‌ பயிற்சிகளில்‌ ஒன்றில்‌ கலந்து கொண்டவர்‌ ஒரே சமயத்தில்‌ இரு இடங்களில்‌ கலந்துகொள்ள முடியாத நிலையை எடுத்துக்‌ கூறக்‌ கால அவகாசமே தராமல்‌ தண்டனைகள்‌ அளிப்பதும்‌ குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளன. மூத்த முடிமக்களைத்‌ தேடிய பட்டதாரி. ஆசிரியர்கள்‌: தேர்தல்‌ சமயங்கள்‌ தவிர வருடம்‌ முழுவதும்‌ வாக்காளர்‌ பட்டியலுடன்‌ சுற்றித்‌ திரியும்‌. கடுமையான பணிதான்‌ வாக்குச்‌ சாவடி அலுவலர்‌ (810) பணி, வழக்கமாக இது. பெரும்பான்மை மாவட்டங்களில்‌ பால்வாடி ஆசிரியர்களுக்குத்தான்‌ வழங்கப்பட்டுள்ளது. விதிவிலக்காக செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில்‌ பொதுத்‌ தேர்வுக்கு மாணவர்‌ களைத்‌ தயார்‌ செய்யும்‌ பட்டதாரி ஆசிரியர்‌ களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஒருபுறம்‌, அவர்‌ களுக்கு, கடந்த 3 வாரங்கள்‌ முன்பு ஒரு பணி தரப்பட்டது. உடனடி -அவசரம்‌, ஆம்‌ தேர்தல்‌ பணி என்றாலே அவசரம்தானே, ஒரு வாக்குச்‌ சாவடி அலுவலரின்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ 80 வயதைக்‌ கடந்த மூத்த குடிமக்கள்‌/ மாற்றுத்‌: திறனாளிகள்‌ ஆகியோரைக்‌ கண்டறிந்து, தேர்தல்‌ நாளன்று வாக்கு அளிக்க நேரில்‌ வா இயலுமா? இயலாதா? இயலாது எனில்‌ வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க ஏதுவாக தபால்‌ ஒட்டு போடுவதற்கு விண்ணப்பம்‌ பெற்று வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைப்பதுதான்‌ அந்த மிக முக்கியப்‌ பணி. அதற்காக வெயிலில்‌ அலைந்து திரிகிறார்கள்‌ ஆசிரியர்கள்‌. கிராமங்களில்‌ ஒரளவு எளிதாக முதியோர்‌ களைக்‌ கண்டுபிடித்துவிட முடியும்‌. ஆனால்‌ சென்னை முதலான நகரப்‌ பகுதிகளில்‌ இந்த 80 வயது மூத்தோரைக்‌ கண்டு பிடித்து பணியை முடிக்க ஆசிரியர்கள்‌, குறிப்பாகப்‌ பெண்‌ ஆசிரியர்கள்‌ படாதபாடு அடைந்ததைக்‌ கண்கூடாகப்‌ பார்க்க முடிந்தது. ஒரு புறம்‌ 9, 10ஆம்‌ வகுப்புகளுக்குப்‌ பாடம்‌ எடுக்கும்‌ கடமையிலிருந்தும்‌ தவறாது PO பணியையும் செய்து முடிப்பது மிகப்பெரும்‌ சவாலாகவே இருந்துள்ளது. இவ்வாறான பணிகளில்‌ ஈடுபடும்‌ ஆசிரியர்‌ களுக்கும்‌ தேர்தல்‌ ஆணையக்‌. ஏன்‌ தேர்தல்‌ பயிற்சி வகுப்புக்கு. நங்கள்‌ வரவில்லை? விளக்கம்‌ கூற மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களுக்கு வரக்‌ கூறும்‌ குறுஞ்‌: செய்திகள்‌ மற்றும்‌ அலைபேசி அழைப்புகள்‌. என்ன செய்யலாம்‌ ? ஜனநாயகத்‌ திருவிழா எனும்‌ தேர்தல்‌ விழாவில்‌, தேரின்‌ வடம்பிடித்து நிலை சேர்க்கும்‌ முக்கியப்‌ பொறுப்பு ஆசிரியர்களுடையது என்பதால்‌ இதனை மகிழ்வுடனே ்‌. ஆனால்‌ நடைமுறைச்‌ சிக்கல்களையும்‌ தேர்தல்‌ கமிஷன்‌ வட்டாரங்கள்‌ புரிந்து கொண்டு சற்றே இவர்களது பிரச்சனைகளுக்கும்‌ காது கொடுக்கலாம்‌. விலங்குகளைப்‌ போல விரட்டி யடிக்கப்படும்‌ சூழல்‌ ஆசிரியர்களுக்கு உருவாகாமல்‌ பார்த்துக்‌ கொள்ளவேண்டும்‌. மேற்சொன்ன முரண்பாடுகளைக்‌ களைந்து சீர்படுத்திய தேர்தல்‌ பணிகளை முறையாக வழங்கிட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள குறைகளை ல்‌ பக்கங்கள் போதாது. ஆனால்‌ மாவட்ட ஆட்சியரின்‌ ஆணை என்ற பெயரில்‌ ஆசிரியர்களையும்‌ அரசு ஊழியர்களையும்‌ பயழுறுத்தாமல்‌ தேர்தல்‌: பணிகளை நல்லுறவுடன்‌ சுமூகமாக ஏற்க. அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்‌. மாபெரும்‌ ஜனநாயக நாட்டில்‌ எதிரில்‌ உள்ளோர்‌ கருத்துகளை ஏற்கும்‌ மனப்பக்குவமும்‌ நடைமுறையும்‌ கூடுதல்‌ தேவை, அதிகாரங்களை வைத்து ஜெயிப்பது வெற்றி அல்ல, ஆகவே இனி வரும்‌ காலங்களில்‌ இந்தத்‌ தேர்தல்‌ குறித்த நடைமுறைப்‌ பணிகளில்‌ சீர்திருத்‌: தங்களை எதிர்பார்க்க ஆவலாக உள்ளோம்‌.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews