Breaking

Saturday, April 24, 2021

IRCTC கழகத்தில் மேலாளர் பணி – மாதம் ரூ.2,60,000 ஊதியம்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் Group General Manager/ General Manager பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும். IRCTC காலிப்பணியிடம்:
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) Group General Manager/ General Manager பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதிகள்:
Group General Manager/ General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். IT Exposure உடன் கூடிய IRAS Officer ஆக இருப்பவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் பதிவு செய்பவர்கள் நேர்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் நாளைக்குள் (25.04.2021) அதிகார அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். மேலும் அதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.
IRCTC Recruitment Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog