நாடு முழுவதும் அனைத்து குடிமகன்களுக்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையை தவறவிட்டவர்களுக்கு அதனை மீண்டும் பதிவிறக்கம் செய்ய எளிய வழிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஆதார் அட்டை பதிவிறக்கம்:
உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுதளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம். இவ்வாறு சிறப்பு மிக்க ஆதார் அட்டை நாட்டில் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை தவறவிட்டு விட்டால் அதனால் வருத்தப்பட தேவையில்லை. ஆதார் அட்டையை மீண்டும் பதிவிறக்கம் செய்ய UIDAI இணையதளத்தை பயன்படுத்தலாம். UIDAI இணையதளத்தில் சென்று சில வழிமுறைகளை பின்பற்றி மிகவும் எளிதாக ஆதார் அட்டையை பதிவிறக்கலாம்.
ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை:
முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://eaadhaar.uidai.gov.in/ செல்லுங்கள்.
அதன் பின்னர், ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய மூன்று விருப்பங்கள் கேட்கும். அதில் முதலாவதாக 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுவது, இரண்டாவதாக சேர்க்கை ஐடி உள்ளிடுவது, மூன்றாவதாக மெய்நிகர் ஐடி உள்ளிடுவது. இதில் தங்களுக்கு விருப்பமான எதாவது ஒரு உள்ளீட்டை கொடுத்து, ஆதார் அட்டையை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன் பின்னர் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் ஆதார் அட்டை எடுக்கும் போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை உள்ளீடு செய்த பின்னர் உங்களது ஆதார் எண்ணின் மின்னணு நகல், சரிபார்ப்பு செய்ய பதிவிறக்கம் விருப்பத்தை வழங்க வேண்டும்.
அதன் பின்னர் உங்களது ஆதார் அட்டையின் மின் நகலை எளிதாக பதிவிறக்கம் செய்யப்படும் அல்லது லேமினேஷன் செய்த ஆதார் அட்டை பெற ஆர்டர் செய்து வீட்டிற்கே தபால் மூலமாக பெறலாம். இதற்கு நீங்கள் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துவது குறித்த அறிவிப்பு:
UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் http://www.uidai.gov.in/
இப்போது எனது ஆதார் பிரிவுக்குள் கெட் ஆதார் விருப்பம் தோன்றும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Retrieve Lost or Forgotten EID / UID விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் நீங்கள் உங்கள் சில விவரங்களான ஆதார் அட்டை எண் (யுஐடி), பதிவு எண் (ஈஐடி), முழு பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நீங்கள் தொலைபேசி எண்ணை வழங்க விரும்பவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடலாம். இப்போது நீங்கள் கேப்சாவை (Captcha) உள்ளிட வேண்டும். அடுத்து, ‘Send OTP’ அல்லது ‘Send TOTP’ விருப்பத்தை கோடுக்கவும். நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதே நேரத்தில் TOTP உங்கள் mAADHAAR பயன்பாட்டிற்கு அனுப்பப்படும். இப்போது கட்டண நுழைவாயில் பக்கம் திறக்கும், அங்கு நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு, அடுத்த 15 நாட்களில் உங்கள் ஆதார் அட்டை ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.