வாக்காளர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 1300 ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 02, 2021

Comments:0

வாக்காளர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 1300 ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அரசாணை வெளியீடு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வாக்கு சாவடிகளுக்கான வழிகளை காட்டுவதற்கான குறியீடு வரைதல், குடி தண்ணீர் வைத்தல், தடுப்பு கட்டைகள் அமைத்தல், மின்சார வசதி ஏற்படுத்துதல் போன்ற செலவுகளுக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இதுவரை தலா 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் தரப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பொருட்களின் செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த தொகையை வாக்குச்சாவடி அமைப்பதற்காக 3000 என்றும் சாமியானா அல்லது பந்தல் போடுவதற்காக தலா 3200 ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதை பரிசீலித்து இந்த செலவுகளுக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 1000 வழங்கியதை 1300 என உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகளை தொடங்குவதற்காக இந்த தொகையில் 650 முன்பணமாக தரப்படும். பணி முடிந்தவுடன் மீதமுள்ள தொகை தரப்படும். இந்த தொகையை அந்தந்த தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த தொகை மூலம் வாக்குச் சாவடிகளில் 15 முதல் 20 பேர் 6 அடி இடைவெளியில் நின்று வாக்களிக்க வசதியாக குறியீடுகள் வரைய வேண்டும், இருபாலாருக்கும் தனி வரிசை அமைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு தனி வரிசை என 3 வரிசைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த வகையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கவுள்ள 88,937 வாக்குச் சாவடிகளுக்கு 11 கோடியே 56 லட்சத்து 18,100 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews