கா்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு மாா்ச் 10 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கா்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டில் பி.ஏ., பி.காம்., பி.லிப் (நூலகம்), எம்.ஏ.(பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, பத்திரிகையியல் மற்றும் வெகுமக்கள் தொடா்பியல், கன்னடம், தத்துவயியல், அரசியல் அறிவியல், ஊரக மேம்பாட்டு ஆய்வு, சம்ஸ்கிருதம், சமூகவியல், தெலுங்கு, உருது, மகளிா் ஆய்வு, நடனம், மிருதங்கம், இசை, நாடகம்), எம்.எஸ்சி(சுற்றுச்சூழல் அறிவியல், எம்எல்ஐசி(நூலகவியல்), எம்.சி.ஜே(ஊடகவியல்), எம்.காம்(நிதி பகுப்பாய்வு, பன்னாட்டு வணிகம், பொருளாதாரம்) இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மைசூருக்கு வெளியே பெங்களூரில் மல்லேஸ்வரம், ஹெப்பாள் பகுதிகளில் மட்டும் கல்வி மையம் இயங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழகத்தின் இணையதள இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு
பிபிஎல் குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் மகளிருக்கு கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு உரிய சான்றிதழ் இருந்தால் கல்விக்கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மண்டல இயக்குநா், பெங்களூரு மண்டல அலுவலகம், கா்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அரசு பியூ மகளிா் கல்லூரி, 4-ஆவது முக்கிய சாலை, 13-ஆவது குறுக்குச்சாலை, மல்லேஸ்வரம், பெங்களூரு-3 என்ற முகவரி அல்லது 080- 23513730, 9880526439 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Display of result of the Joint CSIR-UGC National Eligibility Test (NET) June 2020 on CSIR-NET

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.