ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்; பழைய ஓய்வூதியத் திட்டம்; சம வேலைக்கு சம ஊதியம்; பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் - தி.மு.க தேர்தல் அறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 13, 2021

Comments:0

ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்; பழைய ஓய்வூதியத் திட்டம்; சம வேலைக்கு சம ஊதியம்; பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் - தி.மு.க தேர்தல் அறிக்கை!

ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன்
308. மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம்
309. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்
310. தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் (ளுகூஹகூநு ஹனு ஆஐசூஐளுகூசுஹகூஐஏது கூசுஐக்ஷருசூஹடு) தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும்
சம வேலைக்கு சம ஊதியம்
311. ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால் நீக்கப்பட்டுவிட்டது, இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்
அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா!
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம்
312. பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17க்ஷ பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews